மது அருந்தும் கூடாரமாக மாறிய வாரச்சந்தை

Update: 2022-09-06 16:21 GMT

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ஊராட்சியில் வடசந்தையூரில் வியாழக்கிழமை தோறும் கால்நடைகள் சந்தை கூடுகிறது. மற்ற நேரங்களில் இந்த சந்தை வளாகத்தில் மதுபிரியர்கள் அமர்ந்து மது குடித்து வருகிறார்கள். மேலும் குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியே செல்லும் பெண்கள், பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். சந்தை மது அருந்தும் கூடாரமாக மாறியதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நாசர், பொம்மிடி, தர்மபுரி.

மேலும் செய்திகள்