நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-09-06 14:26 GMT

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ஈரோட்டில் வீட்டு மனைகள் விற்கப்பட்டு வருகிறது. இங்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு பத்திரம் வழங்க, ஈரோடு வீட்டு வசதிப்பிரிவு அலுவலக பணியாளர்கள் மிகவும் கால தாமதம் செய்கிறார்கள். இங்கு தேடி வரும் ஒதுக்கீட்டாளர்களுக்கு உரிய பதில் அளிக்காமலும், அவர்கள் முறையாக பத்திரப்பதிவு செய்ய தேவையான உதவிகள் செய்யாமலும் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறார்கள். கஷ்டப்பட்டு பணம் செலுத்துபவர்களுக்கும் வட்டி நடவடிக்கை எடுத்து கூடுதலாக பணம் வசூலிக்கிறார்கள். புரோக்கர்கள் மூலம் பணியாளர்களை அணுகினால் மட்டுமே பத்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்