செடிகள் அகற்றப்பட்டது

Update: 2022-09-06 14:15 GMT

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு கோவிலில் பாராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால், கோவில் காம்பவுண்டு சுவரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகளின் எச்சங்கள் மூலம் அரசவிதைகள் முளைத்து சேதமடைந்து நிலையில் காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காம்பவுண்டு சுவரில் வளர்ந்த ெசடிகளை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள், பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

-லட்சுமி, திருவட்டார்.

மேலும் செய்திகள்