தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை அடுத்த ஜி.கல்லுப்பட்டியில் குடிநீர் குழாயை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுவதாக, தினத்தந்தியின் புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதரை அகற்றியது. இதற்காக ஊராட்சி நிர்வாகத்துக்கும், 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.