தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களை குரங்குகள் கடிக்க துரத்துகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வைத்திருக்கும் பொருட்களை எடுத்துச் செல்கிறது. அலுவலகத்திற்குள் நுழைந்து அலுவலக கோப்புகளை தூக்கி எறிந்து சேதப்படுத்துகிறது. இதனால் அலுவலகத்திற்கு வருவதற்கு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த குரங்குகளை சம்பந்தப்பட்ட துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாது, மோளையானூர், தர்மபுரி.