பெங்களூரு சுதந்திர பூங்கா அருகே உள்ள சாலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிவடைந்து பல நாட்கள் ஆகியும், நடைபாதையில் வைக்கப்பட்ட சிமெண்டு தடுப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள், பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.