விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிவகாசி சாலை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் விளக்கின் உயரம் குறைவாக உள்ளது. பஸ், லாரி போன்ற வாகனங்கள் சாலையை கடக்கும் போது சிக்னல் விளக்கு தெரியாமல் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆகவே சிக்னல் விளக்குகளின் உயரத்தை சரியான அளவுக்கு உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.