சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கூட்டுரோட்டில் கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மழைநீரை இறைத்துச் செல்வதால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.