கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேராப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் நலன் கருதி சிறுதானிய மதிப்பு கூட்டு அலகு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தற்போது பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த கட்டிடம் சேதம் அடைந்து வருகிறது. மேலும் விவசாயிகளின் சிறுதானியபயிர்களை மதிப்பு கூட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.