கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியான காமராஜர் சதுக்கம் பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு விளக்கு மட்டுமே ஒளிருகிறது. மற்ற விளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பழுதடைந்த மின் விளக்குகளை எரியச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.