திருவெண்ணெய்நல்லூர் அருகே அமாவாசைபாளையம் கிராமத்தில் செயல்பாடின்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் தூண்கள் பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ளதால் விபரீதங்கள் ஏதும் ஏற்படும் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.