விழுப்புரம் அஜீஸ் பள்ளிவாசல் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றபதால் கொசுக்கல் அதிக அளவில் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி, முடிக்க வேண்டும்.