நாகை மாவட்டம் புத்தூர் பகுதியில் உள்ள சாலையோரங்களில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அங்கும், இங்கும் கூட்டமாக சென்று வருகின்றன. இதனால் வாகனங்கள் பன்றிகள் மீது மோதி அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், சாலையோரத்தில் கிடக்கும் கழிவுகள், குப்பைகளை பன்றிகள் சாலையின் நடுவே இழுத்து போட்டு செல்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?