பணிகள் முடியாத நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-07-11 15:27 GMT

புதுச்சேரி நகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க குடிநீர் மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. அவற்றில் பல பணிகள் முடிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. புதுவை கோரிமேடு எல்லையில் பல ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. அவற்றை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். எனவே, பணிகளை தொய்வின்றி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்