பெங்களூரு ஷேசாத்திரி சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அதை அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும் அங்கு குவிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.