சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் ஒய்யவந்தான் பேச்சாத்தகுடி கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.