கிராம நிர்வாக அலுவலகம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-04 12:29 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி போலீஸ் லைன் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தின் மேல்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் அலுவலகத்துக்குள் புகுந்துவிடுகிறது. மேலும், அலுவலக கட்டிடத்தில் செடி,கொடிகள் வளர்ந்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்