நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரம் மெயின் ரோட்டில் கால்நடை மருத்துவக்கிளை நிலையம் உள்ளது. அங்கு சுற்றுப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று செல்வார்கள். இந்தநிலையில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த கால்நடை மருத்துவ நிலையம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. அங்கு மது அருந்துபவர்கள் பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால் கால்நடைகளின் கால்களில் உடைந்த பாட்டில்கள் குத்தி காயம் ஏற்படும் அவலநிலை உள்ளது. எனவே கால்நடை மருத்துவ நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜபாண்டியன், அணியாபுரம், நாமக்கல்.