சங்கராபுரம் அருகே சோளம்பட்டு கூட்டுரோடு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கு பயணிகள் நிற்கவே அச்சப்படுகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி அங்கு புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.