புதுக்கோட்டை மாவட்டம், மலைக்குடிப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக குரங்ககள் சுற்றித்திரிகிறது. இந்த குரங்குகளுக்கு வீடுகளுக்குள் புகுந்து காய்கறிகள் மற்றும் உணவு, திண்பண்டங்களை தூக்கி சென்று விடுகிறது. மேலும் வயல் வெளிகளில் புகுந்து கடலை, நெல் போன்ற பயிர் வகைகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும் தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்து வீணாக்கி வருகிறது. மேலும் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் தினமும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குரங்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.