விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நங்காத்தூர் ஊராட்சியில் இயங்கும் அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அச்சத்துடனே அங்கன் வாடி மையத்திற்கு அனுப்புகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.