நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் சேதமடைந்த காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளி தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி விரைவாக அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?