நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பிள்ளாநல்லூர் பேரூராட்சி 8-வது வார்டில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் பராமரிப்பு பணிக்காக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிப்போர் மிகவும் சிரமப்படுகின்றனர், எனவே இந்த கழிப்பிடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்காக கொண்டு வர வேண்டும்.
-கோபி, பிள்ளாநல்லூர், நாமக்கல்.