கோத்தகிரி பேரூராட்சி மார்க்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 3 நுழைவு வாயில்களிலும் இரும்பு கதவுகள் போடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த கதவுகள் அனைத்தும் துருபிடித்து, மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. அப்போது அசம்பாவித சம்பவம் கூட நிகழலாம். எனவே பாதுகாப்பில்லாத நிலையில் உள்ள அந்த இரும்பு கதவுகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.