கல்வராயன்மலையில் உள்ள தும்பராம்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் சிதிலமடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் தற்போது ரேஷன் கடை இயங்கி வருகிறது. அங்கு போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரியான முறையில் கொடுக்க முடிவதில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.