செஞ்சி மேல்கலவாய் சாலையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் தரைப்பாலம் முழுமையாக சேதம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.