நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எடுப்பல் கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டிடம் ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?