அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு அலுவலகம் மற்றும் 3 குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த அலுவலக பகுதியில் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிக அளவில் வருகிறது. இதனால் அலுவலகத்துக்கு வருபவர்கள் ஒருவித அச்சத்தில் வரவேண்டி உள்ளது. எனவே அலுவலகத்தில் உள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.