அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் மெயின் ரோட்டிற்கு மேற்கு புறத்தில் உள்ள வடமன் குட்டை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரால் 2 முறை நோட்டீஸ் அனுப்பி சுமார் 2 மாதங்கள் ஆகின்றது. ஆனால் இதுநாள் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த குளத்தினை தூர்வாரி கரைகளை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.