சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பவுஞ்சிப்பட்டு கிராமம். இங்கு கிழக்கு தெருவில் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு கிடக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதங்கள் ஏதேனும் நிகழும் முன்பு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணற்றை மூடி போட்டு பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.