கோத்தகிரி காந்தி மைதானத்தில் இருந்து கால்டக்ஸ் செல்லும் செங்குத்தான சாலைஓரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை இருந்தது. ஆனால் இந்த சாலையில் இண்டர்லாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்ற போது நடைபாதை அகற்றப்பட்டது. மீண்டும் நடைபாதை அமைக்காததால் பொதுமக்கள் பாதுகாப்பின்றி சாலையில் நடந்து செல்கின்றனர். எனவே நடைபாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.