ஆலங்குளம் தாலுகா பெத்தநாடார்பட்டியில் சரியான முறையில் வாறுகால் வசதி அமைக்கப்படாததால் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.