வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் மூன்று மதகு பகுதியில் இருந்து ஊத்துமலை குளத்துக்கு ஓடை வழியாக தண்ணீர் செல்கிறது. இந்தநிலையில் ஓடையில் புதர்கள் மண்டி கிடப்பதாலும், குப்பைக்கூளங்கள் கொட்டப்பட்டு இருப்பதாலும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மூன்று மதகு பகுதியில் இருந்து மேலக்கலங்கல் பாலம் வரைக்கும் ஓடையை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?