கோவில்பட்டி வேளாங்கண்ணி நகரில் இருந்து மூப்பன்பட்டி, ஆவல்நத்தம் கிராமங்களுக்கு செல்லும் குறுகிய சாலையில் மூப்பன்பட்டி கண்மாய் உள்ளது. அதில் அமலைச்செடிகள் படர்ந்து சாலையின் உயரத்துக்கு காணப்படுகின்றன. தற்போது சாலையும் சிதிலமடைந்து, தடுப்புச்சுவரும் இல்லாத காரணத்தால், கண்மாய் எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு உள்ளது. எனவே சாலையை சீரமைத்து, கண்மாய்க்கு தடுப்புச்சுவரும் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.