தூத்துக்குடியில் இருந்து புதூர் பாண்டியாபுரம் அருகே இடதுபுறம் வளைவு பகுதியில் புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் செல்லும் வழியில் பஸ்நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டியுள்ளது. மேலும் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இ்ல்லை. எனவே பயணிகள் நிழற்கூடம் கட்டி, மின்விளக்கு வசதியும் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.