அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

Update: 2022-08-30 17:27 GMT

  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் பகல் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளதால் பொது மக்கள் அமருவதற்கும் இடமில்லாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளஞ்செழியன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்