விருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி அருகே எத்திலப்பன்பட்டி கிராமத்தில் உள்ள நீர்தேக்க தொட்டியின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த தொட்டி உள்ள பகுதியை கடந்த செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.