நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த மருங்கூர் பகுதி காராமணி தெரு உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கனரக வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தெருவுக்குள் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர உதவிகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?