நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அதிகாலையில் நடைபயணம் மேற்கொள்பவர்கள் நாய்கள் தொல்லை காரணமாக கையில் கம்புடன் நடைபயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாய்கள் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த்ராஜ், நாமக்கல்.