அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மைக்கேல் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். ஆனால் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்துக்கு தேவையான மின்சார ஒயர் வெளியே தொங்கியடி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடனே பழுதடைந்துள்ள கட்டிடத்தை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.