வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-29 14:50 GMT


திருவாரூர் மாவட்டம் புலிவலம் எஸ். எம். ஏ நகர். மெயின் சாலையில் விவசாயநிலங்களுக்கான வாய்க்கால் உள்ளது. அந்த வாய்காலில் படித்துறை அருகே கழிவு நீர் தேங்கி சாக்கடையாக உள்ளது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புலிவலம்..

மேலும் செய்திகள்