மயிலாடுதுறை ரெயில்நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் தூர்வாரப்படாடமல் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பவரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.