பண்ருட்டி-கடலூர் இடையே பாலூர் வழித்தடத்தில் குறைந்தளவே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் அவதியடைகின்றனர். எனவே இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.