கூடலூர் நகருக்குள் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் நகராட்சி அலுவலகம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ராஜகோபாலபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பெண்கள், மாணவிகள் மற்றும் முதியோர் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.