மதுரை நகரில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்களில் குறிப்பாக பெரியார் பஸ்நிலையம் - ஆண்டாள்புரம் சாலையின் இடையே உள்ள 2 பாலங்கள், வசந்தநகர்-காளவாசல் இடையே உள்ள பாலம், திருப்பரங்குன்றம் ஆகிய பாலங்களின் இறக்கத்தில் போடப்பட்ட தொடர் வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இந்த தொடர் வேகத்தடைகள் சீராக இல்லாமல் சிறிய பெரிய அளவில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஒட்டிகள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?