நோயாளிகள் அவதி

Update: 2025-08-31 17:15 GMT

திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் உள்ள மருந்து கொடுக்கும் இடத்தில் பெண்கள் மற்றும் மூதாட்டிகள் மருந்து வாங்கும் இடத்தில் தடை பெயர்ந்து பலமாக உள்ளதால் அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் மருந்து வாங்கும் இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மருந்து கொடுக்கும் இடத்தில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்