குரங்குகள் தொல்லை

Update: 2025-08-31 16:18 GMT

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா ஒடுக்கூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள குடியிருப்பு பகுதிகள், கடைகளில் குரங்குகள் பெரும் அட்டகாசம் செய்கின்றன. மேலும் வீடுகளுக்குள் புகுந்து மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்களை தூக்கி செல்கின்றன. அதேபோல் கடைகளில் தொங்கவிடப்படும் உணவுப் பொருட்களை கொத்தாக அள்ளி செல்கின்றன. இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்