ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிறுத்த மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகுகிறது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் மழைநீர் தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே பஸ் நிறுத்த மேற்கூரையை சரி செய்ய வேண்டும்.