சென்னை பெரம்பூரில் இருந்து அசீஸ் நகர் வரை, அலெக்ஸ் நகர் வழியாக 3 மின் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது இந்த வழித்தடத்தில் ஒரு மின் பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அலெக்ஸ் நகர் செல்லும் பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாமல் அதிக நேரம் பஸ் நிறுத்தத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் பொதுமக்கள் நலன் கருதி பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்குமா?