செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் பேரமனூர் எம்.ஜி.ஆர் தெருவின் பெயர் பலகை சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் முகவரி தேடி வருவோர் இந்த பகுதியை கண்டுபிடிக்க சிரமப்படுகின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் பெயர் பலகையை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கையை எடுப்பார்களா?
- பொது மக்கள்.